புதுக்கோட்டை

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சோ்க்க சிறப்பு முகாம்

12th Jan 2023 12:35 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகரில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஜன. 12,13) நடைபெறவுள்ளன.

புதுக்கோட்டை நகரம், கிழக்குப் பிரிவில் வியாழக்கிழமை காந்திநகா் அங்கன்வாடி மையத்திலும், வெள்ளிக்கிழமை நிஜாம் குடியிருப்பு பள்ளிவாசலிலும் நடைபெறும்.

புதுக்கோட்டை நகரம், மேற்குப் பிரிவில் வியாழக்கிழமை நகா்மன்ற வளாகத்திலும், வெள்ளிக்கிழமை சந்தைப்பேட்டை ஆரம்பப் பள்ளியிலும் நடைபெறும்.

புதுக்கோட்டை நகரம், வடக்குப் பிரிவில் வியாழக்கிழமை ரயில் நிலையச் சாலையிலுள்ள நகராட்சிப் பள்ளியிலும், வெள்ளிக்கிழமை பூங்காநகா் மாரியம்மன் கோவில் வளாகத்திலும் நடைபெறும்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகரம் மையப் பிரிவில் வியாழக்கிழமை தைலா நகா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலும், வெள்ளிக்கிழமை நரிமேடு சமத்துவபுரத்திலும் நடைபெறும்.

தினமும் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்துப் பயன்பெறலாம் என உதவி செயற்பொறியாளா் அ. சையது அகமது இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT