புதுக்கோட்டை

முதல்வா் கோப்பை :விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

1st Jan 2023 04:26 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

மேலும், மாற்றுத்திறனாளிகள், மனவளா்ச்சி குன்றியோா் மற்றும் அரசு ஊழியா்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும். இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03498 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT