செய்திகள்

மறுவெளியீட்டிற்குத் தயாராகும் வேட்டையாடு விளையாடு

19th May 2023 05:50 PM

ADVERTISEMENT

 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. காவல்துறை அதிகாரியான ராகவன்(கமல்) சந்திக்கிற கொலை வழக்கும் அதன் பின்னணியும் என திரில்லர் பாணியில் உருவான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிக்க: வெளியானது வடிவேலு குரலில் ராசா கண்ணு பாடல்!

ADVERTISEMENT

இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து நவீன மெருகூட்டலுடன்  வேட்டையாடு விளையாடு படத்தை வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது!

ADVERTISEMENT
ADVERTISEMENT