இந்தியா

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: சச்சின் பைலட்

19th May 2023 06:05 PM

ADVERTISEMENT

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸைச் சேர்ந்த சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு பாகுபாடற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதவரவளிக்க வந்த அவர் இதனை தெரிவித்தார். 

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இவர் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்

மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள் பல நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது புகாரினை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸைச் சேர்ந்த சச்சின் பைலட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ADVERTISEMENT


மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சச்சின் பைலட் பேசியதாவது: மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். கடந்த 26-27 நாள்களாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நமது வீரர், வீராங்கனைகள் மிகுந்த வலியில் இருக்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு அவர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அவர்களது குரல் அரசுக்கு கேட்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். 

இதையும் படிக்க: ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தில் மாற்றம் 

நம் நாட்டினுடைய மகிழ்ச்சி என்பது இளைய சமுதாயம், விவசாயிகள் மற்றும் மல்யுத்த வீரர்கள் ஆகிய மூவரையும் சார்ந்தே உள்ளது. இந்த நாட்டின் இளைய சமுதாயம், விவசாயிகள் மற்றும் மல்யுத்த வீரர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் நம் நாடும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT