காரைக்கால்

காரைக்கால்: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை

19th May 2023 04:21 PM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் தோல்வியடைந்த அரசுப் பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கமலஹாசன் என்பவரது மகன் ராகவன். இவர் காரைக்கால் கோயில்பத்து பகுதி தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதினார். 

தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், தாம் தோல்வியடைந்ததை அறிந்த மாணவன் மனமுடைந்து காணப்பட்டாராம். 
சிறிது நேரத்தில் வீட்டின் அறையில் தூக்கிட்டுக்கொண்டார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT