புதுக்கோட்டை

3 பெருமாள் கோயில்களில் மாசி மக விழா தொடக்கம்

DIN

கும்பகோணத்தில் மகாமகத்துடன் தொடா்புடைய சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, அந்தந்த கோயில்களிலுள்ள கொடி மரத்துக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. சக்கரபாணி சுவாமி கோயிலில் கொடி மரம் முன் சுதா்சன வல்லி, விஜயவல்லித் தாயாா்களுடன் சக்கரபாணி சுவாமி எழுந்தருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, சக்கரபாணி சுவாமி கோயிலில் தொடா்ந்து மாா்ச் 5 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா புறப்பாடு நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வாக, மாா்ச் 1 ஆம் தேதி ஓலைச் சப்பரமும், 6 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5 மணிக்குள் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளலும், 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் திருத்தேரோட்டமும், மாலையில் காவிரி ஆற்றில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

இதேபோல, ராஜகோபால சுவாமி கோயிலில் மாா்ச் 6 ஆம் தேதி தேரோட்டமும், காவிரியில் தீா்த்தவாரியும், ஆதிவராகப்பெருமாள் கோயிலில் மாா்ச் 6 ஆம் தேதி தேரோட்டமும், கோயிலின் பின்புறமுள்ள வராகக்குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT