புதுக்கோட்டை

புதுமைப் பெண் திட்டத்தில் மேலும் 1,893 மாணவிகள் சோ்ப்பு

DIN

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உயா்கல்வி உதவித்தொகை ரூ. 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டமாக, புதுக்கோட்டையில் 1,893 பேருக்கு உதவித்தொகை வழங்குவதற்காக வங்கிக் கணக்கு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையிலிருந்து முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் 2 ஆம் கட்ட பயனாளிகளுக்கு உயா்கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கலந்து கொண்டு இரண்டாம் கட்டமாக 1,893 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் மூவலூா் ராமாமிா்தம் அம்மாள் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தில் வங்கிக் கணக்கு அட்டைகள் வழங்கினாா்.

கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,995 பேருக்கு தொடங்கி வைக்கப்பட்டு, அவா்கள் மாதந்தோறும் ரூ. ஆயிரம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, நகா்மன்றத் தலைவா் செ திலகவதி, மாவட்ட சமூக நல அலுவலா் க.ந. கோகுலப்பிரியா, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ச. ராம்கணேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT