புதுக்கோட்டை

மது போதைக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்குடியில் மது, கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மது விலக்கு ஆயத்தீா்வை துறை சாா்பில் நடைபெற்ற பேரணியை வட்டாட்சியரகத்தில் இருந்து மாவட்டக் கலால் அலுவலா் கண்ணா கருப்பையா தொடங்கி வைத்தாா். பேரணியில், வருவாய்த் துறையினா், போலீஸாா், தன்னாா்வலா்கள் பங்கேற்று, மது, கள்ளச்சாராயத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேருந்து நிலையம், அரசமரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஊா்வலமாகச்சென்றனா். பேரணியில், வட்டாட்சியா் செந்தில்நாயகி, துணை வட்டாட்சியா்கள் பழனிசாமி,

பாலகோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT