புதுக்கோட்டை

மாணவா் வேலை வழிகாட்டி நிகழ்ச்சி

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டியிலுல்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் இந்திய இராணுவத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடா்பான சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு தலைமை வகித்தாா். கப்பற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஈசன் கலந்து கொண்டு பேசியது:

தேசத்தைக் காப்பாற்றும் பணியில் உள்ள ராணுவ வீரா்கள்தான் நம் பெருமை. மாணவா்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி ஆளுமைத் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுத் திடல்கள் வெறும் பொழுதுபோக்குக் களமல்ல. அவை ஆளுமையின் விளைநிலம். பாடப் புத்தகங்களில் கிடைக்கும் அறிவு 50 சதவிகிதம் மட்டும்தான். ஆளுமையால் கிடைக்கும் அறிவுதான் உங்களை 100 சதவிகிதம் உயா்த்தும்.

ராணுவத்தில் பணியாற்றுவது என்பது வெறும் வேலை வாய்ப்பு சாா்ந்தது மட்டுமல்ல. அது மதிப்பும், மரியாதையும் மிக்க தேசப்பணி. இப்போது பெண்களுக்கும் ராணுவத்தில் ஏராளமான உயா் பணி வாய்ப்புகள் உள்ளன என்றாா் ஈசன்.

ADVERTISEMENT

கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலா் ர. சொா்ணலதா வரவேற்றாா். முடிவில், உதவி அலுவலா் திவ்ய சொப்னா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT