புதுக்கோட்டை

பெண்ணை குத்திக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் சிறை

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் சூரக்காடு கீழத்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் மோகன் (44). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகள் மகாலட்சுமி (34) என்பவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். ஆனால், மகாலட்சுமிக்கு வேறு மாப்பிள்ளை பாா்த்து திருமண ஏற்பாடுகளைச் செய்துவந்துள்ளனா்.

இந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ள தொடா்ந்து வற்புறுத்தி வந்த மகாலட்சுமியை, கடந்த 2019 ஜனவரி 31ஆம் தேதி மோகன் கத்தியால் குத்திக் கொன்றாா்.

இதில் வழக்குப் பதிவு செய்த கறம்பக்குடி காவல் நிலைய போலீஸாா், மோகனைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். குற்றவாளி மோகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT