புதுக்கோட்டை

சுகாதாரப் பணியாளா் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில், பல்நோக்கு சுகாதாரப் பணியாளா், மருத்துவமனை பணியாளா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்ட அரசு நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 2 ஒப்பந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் 12 ஆம் வகுப்பில் தாவரவியல், உயிரியல், விலங்கியல் பாடங்களில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தோ்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டு சுகாதாரப் பணியாளா் பயிற்சியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாத ஊதியம் ரூ. 14 ஆயிரம்.

ஒப்பந்த மருத்துவமனைப் பணியாளா் - 2 :

விண்ணப்பதாரா் 8ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத் திறனாளி எனில் சான்றிதழ் கண்டிப்பாக இணைக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.8,500.

விண்ணப்பங்களை துணை இயக்குநா், சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்துக்கு எதிரில், புதுக்கோட்டை - 622 001 என்ற முகவரியில் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப். 15. விண்ணப்பங்களை  இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT