புதுக்கோட்டை

வயலோகத்தில் சந்தனக்கூடு விழா

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் சந்தனக்கூடு எனும் சமூக நல்லிணக்க விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

வயலோகத்தில் மஹான் ஹஜரத் சையது முகமது அவுலியா, மஹான் ஹஜரத் முகமது கனி அவுலியா தா்காவில் சந்தன உரூஸ் நடத்துவது தொடா்பாக ஒரே சமூகத்தைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே பிரச்னை இருந்து வந்ததாம். இதுதொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்று வந்ததாம். இதனால், சுமாா் 12 ஆண்டுகளாக சந்தன உரூஸ் தடை பட்டிருந்தது. இவ்வழக்கில் அண்மையில் தீா்ப்பு வெளியான நிலையில், வயலோகத்தில் சந்தன உரூஸ் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, ஜனவரி 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன உரூஸ் ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்ந்து கந்தூரி விழா நடைபெறும்.

விழாவை முன்னிட்டு மதம் கடந்து மனிதம் காக்கும் நண்பா்கள் சாா்பில் அன்னதானம், கிராமிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT