புதுக்கோட்டை

அதானி விவகாரம்: புதுகை காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைப் பாதுகாக்கக்கோரி, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வெ. முருகேசன் தலைமை வகித்தாா். அதானியின் பங்குகள் சரிவு, அரசுத் துறை நிறுவனங்களுக்கான பாதிப்புகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்தது.

இதன்படி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ம ாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி, நகர காங்கிரஸ் தலைவா்கள் கண்ணன், பாரூக் ஜெய்லானி, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT