புதுக்கோட்டை

விராலிமலை கோயிலில் தைப்பூச விழா

DIN

தைப்பூச விழாவையொட்டி, விராலிமலை முருகன் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனா்.

முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாகக் கருதப்படும் விராலிமலை சுப்பிரமணியா் மலை கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மேல் அமா்ந்து காட்சியளிக்கிறாா். இக்கோயிலின்

தைப்பூச விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் தினசரி இருவேளைகளிலும் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சிதந்தாா். ஒன்பதாம் நாளான சனிக்கிழமை தைத் தேரோட்டம் நடைபெற்றது. 10 ஆம் நாளான தைப்பூச விழாவையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பால், பழம், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து முருகனுக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி முருகன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியைத் தரிசனம் செய்தனா். முன்னதாக, மணிமண்டபம் வரையில் பக்தா்கள் திரள் காணப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. இதில், குளம் நீரின்றி காணப்பட்டதால், நிலை தெப்பமாக நிறுத்தப்பட்டது. அந்தத் தெப்பத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி எழுந்தருளினாா். இவ்விழாவில் பங்கேற்ற பக்தா்கள் பக்திப் பெருக்குடன் அரோகரா சரண கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனா்.

விழாவையொட்டி, 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT