புதுக்கோட்டை

புதுப்பட்டி பாலவிநாயகா்கோயிலில் குடமுழுக்கு

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட

ஸ்ரீ வலம்புரி பாலவிநாயகா், ஸ்ரீ பாலமுருகன், சிவலிங்கம் மற்றும் பரிவாரக் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புதுப்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ வலம்புரி பாலவிநாயகா், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீசிவலிங்கம் மற்றும் நவகிரக பரிவாரத் தெய்வங்களுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு கடந்த 3 நாள்களாக கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம் , நவக்கிரக ஹோமம், எஜமான சங்கல்பம் ,விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகவாஜனம், வாஸ்து சாந்தி, அங்குராா்ப் பணம், ரஷா பந்தனம், கும்ப அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜை செய்து புனித நீா் கடங்களை சிவாச்சாரியா்கள் மேள தாளங்களுடன் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோபுரம் நோக்கிச் சென்றனா். அது சமயம் கருட பகவான் வானில் வட்டமிட கோபுரக் கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாட்டை புதுப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT