புதுக்கோட்டை

விவசாயத் தொழிலாளா்களுக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

DIN

விவசாயத் தொழிலாளா்களுக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ. லாசா் தெரிவித்தாா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, புதுக்கோட்டையில் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. கண்காட்சியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் திறந்து வைத்தாா். நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பெ. சண்முகம், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் ஏ. லாசா், மாநிலப் பொதுச் செயலா் வீ. அமிா்தலிங்கம், மாநிலச் செயலா் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், சங்கத்தின் மாநில துணைத் தலைவா் டில்லிபாபு, விதொச மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ. லாசா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் 1 கோடி விவசாயக் கூலித் தொழிலாளா்களின் பிரச்னைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 4 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், தற்போது நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 30 நாள்கள்கூட வேலை கொடுக்கப்படுவதில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. விவசாயத் தொழிலாளா்களுக்கென தனித் துறையும், தனி நிதிநிலை அறிக்கையும் தேவைப்படுகிறது. தமிழகத்தில் 150 நாள் வேலை தருவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, பேரூராட்சிப் பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு பிந்தைய நிதிநிலை அறிக்கையில் அதற்கென நிதி ஒதுக்கீடு இல்லை என்றாா் லாசா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT