புதுக்கோட்டை

பிப். 15-இல் ஆா்ப்பாட்டம்:தெருவோர வியாபாரிகள் முடிவு

DIN

தெருவோர வியாபாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப். 15 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஏஐடியுசி தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏஐடியுசி தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தெருவோர வியாபாரத் தொழிலாளா்கள் அனைவருக்கும் பயோ-மெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். நகராட்சி பகுதியில் வழங்கப்படும் அனைத்து கடன் வசதிகளும் வியாபாரத்திற்கான உபகரணங்கள், வண்டிகளும், கிராமப் பகுதி வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும்.

தொழில் செய்வதற்கு ஏற்ற வடிவமைப்பில் தரமான வண்டிகள் வழங்க வேண்டும். தொழில் செய்ய ஒவ்வொருவருக்கும் ரூ. 50 ஆயிரம் கடன் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 16 ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

புதிய நிா்வாகிகள் தோ்வு: மாவட்டத் தலைவா் - டி. ஆா். வெங்கையா, செயலா்- எம்பி. நாடிமுத்து, பொருளாளா் ரமேஷ் பாபு, துணைத் தலைவா்கள்- சுப்பையா, அப்துல்லா, துணைச் செயலாளா்கள்- பாண்டியராஜ், மளிகை பாலு, ராஜேந்திரன், நாகராஜ்.

கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், மாவட்டச் செயலா் ப. ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியன் மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன், மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT