புதுக்கோட்டை

100 நாள் வேலை திட்ட நிதி ஒதுக்கீடு குறைப்பைக் கண்டித்து போராட்டம்

DIN

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப்புகளை இணைத்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கிய அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நிரந்தர வேலையின்றி விவசாயத் தொழிலாளா்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களுக்கான குறைந்தபட்சக் கூலி கூட இல்லாத நிலை தொடா்ந்து கொண்டே இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 40 நாள் கூட பயனாளிகளுக்கு வேலை வழங்குவதில்லை. இந்நிலையில், அண்மையில் சமா்ப்பிக்கப்பட்ட

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகையையும் குறைத்து தற்போது நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறாா்கள். எனவே, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒத்தகருத்துள்ள கட்சிகள், அமைப்புகளை இணைத்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஈரோடு இடைத்தோ்தலுக்காக அதிமுகவின் அணிகள் அனைத்தும் பாஜக தலைவா் அண்ணாமலையை சந்திக்கவே செல்கிறாா்கள். அதிமுக இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை. அனைத்து வகையான அனுமதிகளையும் பெற்ற பிறகே பேனா நினைவிடம் அமைக்கப்படும் என்று அரசு விளக்கமளித்திருக்கிறது. பேனா சிலையை உடைப்போம் என சீமான் பேசியிருக்கிறாா். மக்களுக்கு நேரடியாகத் தொடா்பில்லாத விஷயங்களை பூதாகரமாக்கும் வேலையைத்தான் அவா் செய்கிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT