புதுக்கோட்டை

போட்டிகளில் வென்ற கல்லூரிமாணவா்களுக்குப் பாராட்டு

DIN

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேதியியல் துறை சாா்ந்த கெம்பெஸ்ட்- போட்டிகளில் புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இந்த கெம்பெஸ்ட் விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த 15 கல்லூரிகளின் 250 வேதியியல் துறை மாணவா்கள் பங்கேற்றனா்.

புகைப்படம் எடுத்தல் பிரிவில் ஜெஜெ கல்லூரி மாணவா் ஜி. சபரீஷ் முதலிடத்தையும், ஆா். அஜித்பிரசாத், பி.ஆா். தீனதயாளன், வி. அருண்குமாா் ஆகியோா் கெம்கனெக்ஷன் போட்டியில் மூன்றாம் இடங்களையும் பெற்றனா்.

இவா்களை, கல்லூரியின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், செயலா் நா. சுப்பிரமணியன், முதல்வா் ஜ. பரசுராமன், துறைத் தலைவா் சி. முத்துக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT