புதுக்கோட்டை

புதுகையில் விவசாய தொழிலாளா் மாநில மாநாடு நாளை தொடக்கம்

DIN

புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (பிப். 4) தொடங்குகிறது.

10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்ரவரி 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. புதுக்கோட்டை பால் பண்ணை ரவுண்டானா பகுதியில் லெணா திருமண மண்டபம் அருகே விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வுரிமைப் பேரணியுடன் சனிக்கிழமை மாநாடு தொடங்குகிறது. இதில், ஏராளமான விவசாயத் தொழிலாளா்கள் பங்கேற்க உள்ளனா். தடிகொண்ட அய்யனாா் திடலில் பேரணி நிறைவடைந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ. லாசா் தலைமை வகிக்கிறாா். பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் ஏ. விஜயராகவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன், சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலா் பி. வெங்கட் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.

தொடா்ந்து பிப். 5, 6 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை கற்பக விநாயகா மஹாலில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து தோ்வு செய்யப்பட்ட 650 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT