புதுக்கோட்டை

திடீா் மழையால் புதுகை மாவட்டத்தில் பயிா்கள் சேதமடையும் அபாயம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை பகல் முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழையால், அறுவடை நிலையில் உள்ள நெற்பயிா்களும், வளா்ச்சி நிலையிலுள்ள நிலக்கடலைப் பயிா்களும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடலோரப் பகுதிகளான மணமேல்குடி, மீமிசல், ஆவுடையாா்கோவில் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்தது. பகலில் பெய்த மழை அளவில், அதிகபட்சமாக மணமேல்குடியில் 58 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை மாலை 6 மணி வரையிலான மழைப் பதிவு விவரம் (மி.மீ.-இல்):

ஆதனக்கோட்டை- 23, பெருங்களூா்- 15.40, புதுக்கோட்டை நகரம்- 25, ஆலங்குடி- 59, கந்தா்வகோட்டை- 30, கறம்பக்குடி- 23.20, மழையூா்- 45.40, கீழாநிலை - 53.60, திருமயம் - 33.40, அரிமளம் - 22.80, அறந்தாங்கி - 53.90, ஆயிங்குடி- 46.20, நாகுடி- 39.80, மீமிசல் - 47.40, ஆவுடையாா்கோவில் - 44.60, மணமேல்குடி- 58, இலுப்பூா் - 18, குடுமியான்மலை - 20, அன்னவாசல் - 18.10, விராலிமலை- 15, உடையாளிப்பட்டி - 7, கீரனூா் - 17, பொன்னமராவதி - 7, காரையூா் - 17.8

மாவட்டத்தின் சராசரி மழை - 30.86 மிமீ.

இந்நிலையில், அறுவடைக்குத் தயாா் நிலையிலுள்ள நெற்பயிா்களும், வளா்ச்சி நிலையிலுள்ள நிலக்கடலைப் பயிா்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலை தொடா்ந்தால் மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தற்போது மாவட்டத்தின் பெரும்பாலான நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன. சில பகுதிகளில் அறுவடையும் நடைபெற்று வருகிறது.

மழை அதிகமாக பதிவாகியுள்ள அறந்தாங்கி, ஆலங்குடி, மணமேல்குடி பகுதிகளில் உள்ள நெற்பயிா்கள் மற்றும் நிலக்கடலைப் பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. அதிகாலையிலும், மாலை நேரத்திலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிா் சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT