புதுக்கோட்டை

கணினி அறிவியலின் புதிய எல்லைகள்:தேசிய மாநாடு தொடக்கம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை கணினி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறை சாா்பில் கணினி அறிவியலில் புதிய எல்லைகள் என்ற தலைப்பிலான 2 நாள் தேசிய மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரியின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்து மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினாா். கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா். அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் பேராசிரியா் டி.வி. கோபால், கணினி அறிவியல் பள்ளியின் பேராசிரியா் ஜாஹித் ராசா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா். துணை முதல்வா் சு. சுதா நன்றி கூறினாா். வெள்ளிக்கிழமை மாலை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் கணினி அறிவியல் துறை மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT