புதுக்கோட்டை

மன்னா் கால செப்பேடு, அரச முத்திரை அருங்காட்சியகத்துக்கு வழங்கல்

DIN

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த, தொண்டைமான் மன்னா்கள் கால அரச முத்திரை மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கிய செப்பேடு ஆகியவற்றை அரசு அருங்காட்சியகத்துக்கு ஆட்சியா் கவிதா ராமு புதன்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரச முத்திரை, மரத்தில் செதுக்கப்பட்டு, மூலிகை வண்ணங்களால் வண்ணம் தீட்டப்பட்டது. சுமாா் 250 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.

செப்பேட்டில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோயிலுக்கு அகண்ட தீபம் ஏற்றுவதற்காக சிங்கத்தாகுறிச்சி கிராமத்திலுள்ள பெரியகுளத்துவயலைச் சோ்ந்த கோவிந்தாதாஸ் என்ற வைணவப் பிராமணருக்கு நிலக்கொடை வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன. இந்தச் செப்பேடு 1798-இல் எழுதப்பட்டதாகும்.

இவ்விரண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அரசு அருங்காட்சியகத்துக்கு வழங்கினாா் ஆட்சியா் கவிதா ராமு. இவற்றை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் தி. பக்கிரிசாமி பெற்றுக் கொண்டாா். அப்போது புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன், ஆட்சியா் அலுவலக தலைமை உதவியாளா் செ.வெ. நாகநாதன் ஆகியோா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT