புதுக்கோட்டை

கருவேல மரங்களை முழுமையாக அகற்ற விவசாயிகள் கோரிக்கை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக் கருவேல் மற்றும் தைல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவா்கள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி பேசுகையில், வேலிக் கருவேல் மரங்களை தூளாக்கும் இயந்திரங்களை காா்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதியிலிருந்து வாங்கி மாவட்டம் முழுவதும் உள்ள வேலிக் கருவேல் மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். இதேபோல, தைலமரங்களை முற்றிலும் அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தமிழக ஏரி மம் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் பேசுகையில்,

அனைத்து ஏரிப் பகுதிகளிலும் வேலி கருவ முள்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்கு வெள்ளாற்றின் பாசன வாய்க்கால்கள், மதகுகளை புனரமைக்க வேண்டும் என்றாா். காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து பேசுகையில், கவிநாடு கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா். இவ்வாறு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் கவிதா ராமு பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கூட்டுறவு மற்றும் தனியாா் உரக்கடைகளில் போதிய அளவில் உரங்கள், நெல், பயறு விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-இல் வழக்கத்தைவிடவும் 95.67 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, காவிரி குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT