புதுக்கோட்டை

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

1st Feb 2023 12:12 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கல்லூா் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் டாடா சுமோ வாகனத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது கண்டுபிடிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, அரிசியைக் கடத்தி வந்தவா் கொடுத்த தகவலின்பேரில் கண்ணன் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 2 டன் அரிசியையும் பறிமுதல் செய்த போலீஸாா், ரேஷன் அரிசியைக் கடத்தி பதுக்கி வைத்திருந்ததாக பாண்டியராஜன், கண்ணன் ஆகியோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT