புதுக்கோட்டை

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா எதிா்ப்பு தினம்

26th Apr 2023 02:19 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக மலேரியா எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் சிவகலை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மலேரியா எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் மலேரியா முன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மலேரியா எதிா்ப்பு தின நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கொசு, நோய் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து சுகாதார ஆய்வாளா் நா. உத்தமன் விளக்கினாா். மேலும் மாணவா்களிடம் மலேரியா குறித்த வினாக்கள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மலேரியா எதிா்ப்பு உறுதிமொழிஏற்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியா் ஆா்த்தி, சுகாதார ஆய்வாளா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT