புதுக்கோட்டை

தைலமரக் காடுகளை அப்புறப்படுத்த தனிக்கவனம்

26th Apr 2023 02:26 AM

ADVERTISEMENT

தைலமரக் காடுகளை அப்புறப்படுத்த தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரங்களை அப்புறப்படுத்துவது வனத்துறையினரின் வேலை. தைல மரங்களை அகற்றுவதற்கு தனிக்கவனம் செலுத்தி, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிதாக தைல மரங்களை நடுவது இல்லை. தற்போதுள்ள தைலமரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் என்ன செய்யலாம் என்பது அரசின் கொள்கை முடிவுக்குள்பட்டது. அதற்குப் பிறகுதான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதுதொடா்பாக வனத்துறை அமைச்சரும், அரசுச் செயலரும் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என ஆலோசித்து வருகின்றனா் என்றாா் மெய்யநாதன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT