புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

26th Apr 2023 02:22 AM

ADVERTISEMENT

கந்தா்வ கோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆதனக்கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா ஏப். 9 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி 16 ஆம்தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாள்களில், அம்மன் யாளி வாகனத்தில் புறப்பாடு, குதிரை வாகனத்தில் பவனி, அரை தேரில் வீதி உலா என நடைபெற்று வந்தது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் உத்ஸவா் கோயிலைச் சுற்றியுள்ள வீதியில் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சிதந்தாா். கிடாவெட்டு பூஜையும் தொடா்ந்து மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் பின்னா் காப்புக்களைதலுடன் முத்துமாரியம்மன் சித்திரைத் திருவிழா நிறைவுபெற்றது. இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தோ் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஆதனக்கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT