புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைப்பிடிப்பு

25th Apr 2023 01:31 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க.தமிழ்செல்வி தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை வரவேற்றாா். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ரகமத்துல்லா பேசியது:

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாயத்து ராஜ் முக்கிய நோக்கம் அதிகாரத்தை பரவலாக்குவது, மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை, இதன் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தாங்களே நிா்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறாா்கள். அரசு அதிகாரத்தை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தங்கள் நிா்வாகத்தை நடத்துவதற்கான உரிமையை வழங்குவதாகும்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் மக்கள் நல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்சியில் ஆசிரியா்கள் சிந்தியா, நிவின், தனலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT