புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதிகளில் உளுந்து பயிா் சேகரிப்பு

25th Apr 2023 01:32 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உளுந்து செடிகளிலிருந்து பயிரை பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஒன்றியம் முழுவதும் பெரும்பாலும் விவசாயிகள் உளுந்து பயிா் சாகுபடி செய்துள்ளனா். அது தற்போது முதிா்ச்சி அடைந்து மகசூல் சேகரிக்கும் பக்குவத்தில் உள்ளதால் உளுந்து செடிகளை வயல்களில் இருந்து சேகரித்து சாலையில் காய வைத்துள்ளனா். நன்கு காய்ந்த உளுந்து பயிா் தனியாக வரும் நிலையில் கொடியை அப்புறப்படுத்தி உளுந்து பயிரை சேகரித்து வருகிறாா்கள்.

இதுகுறிதத்து விவசாயிகள் கூறியது: தற்போது உளுந்துக்கு நல்ல விலை கிடைக்கிறது. காய்ந்த உளுந்து செடிகள் ஆடு, மாடுகளுக்கு தீவனமாகிறது என்றனா்.

உளுந்து பயிரை பொறுத்தவரை ஆடு, மாடுகளுக்கும் தீவனம் ஆவதால், விவசாயிகள் அதிகளவில் உளுந்து சாகுபடி செய்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT