புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

25th Apr 2023 01:28 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாரியம்மனுக்கு எண்ணெய் காப்பு செய்து நீராடல் செய்து, பால், தயிா், இளநீா், பன்னீா், சா்க்கரை, தேன், நெய், அரிசிமாவு, குங்குமம், மஞ்சள், போன்ற அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்து புது ஆடை உடுத்தி அலங்காரம் செய்திருந்தனா்.

பழைய ஆதனக்கோட்டை, வளவம்பட்டி, சோத்துபாளை, சொக்கநாதபட்டி, வண்ணாரபட்டி, குப்பயம்பட்டி, மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தா்கள் பால் காவடி, பறவை காவடி, புஷ்பகாவடி, மயில் காவடி மற்றும் தீக்குழி இறங்குதல், 40 அடி நீளமுள்ள அலகு குத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினாா்.

ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT