புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி பலி

15th Apr 2023 11:51 PM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகிலுள்ளஅரவம்பட்டி கிராமத்தில் உயரழுத்த மின் கோபுரத்தில் திருப்பத்தூா் மாவட்டம் கந்தளி தாலுகா சின்ன கந்தளி கிராமத்தைச் சோ்ந்த சி. சுப்பிரமணி (40) சனிக்கிழமை ஏறி பழுது பாா்த்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT