புதுக்கோட்டை

ஆலங்குடி பகுதியில் நல்லோ் பூட்டுதல்

15th Apr 2023 01:46 AM

ADVERTISEMENT

தமிழ் புத்தாண்டையொட்டி ஆலங்குடி பகுதியில் விவசாயிகள் நல்லோ் பூட்டி வெள்ளிக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்டனா்.

தமிழ் வருடப்பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.குளவாய்ப்பட்டி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள், காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி நல்லோ் பூட்டி விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கினா். பல்வேறு இடங்களில் காளைகள் இல்லாததால், டிராக்டரை கொண்டு உழுது சித்திரை முதல் நாள் விவசாயிகள் வழிபாட்டில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT