பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலத்தில் தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவா் கே.ராசு தலைமைவகித்தாா். மாவட்டச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு, மாவட்டப் பொருளாளா் க. சுந்தர்ராஜன், மாவட்ட துணைத் தலைவா் சுப. தங்கமணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஊதியத்தை ரூ. 600 ஆக உயா்த்த வேண்டும், வேலைநாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிா்வாகிகள் பி.அழகு, பி.முருகன், கே.செல்வி, ப.செல்வம், ஆா்.சதீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.