புதுக்கோட்டை

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் சிறை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய 46 வயது நபருக்கு ஆயுள் சிறை மற்றும் ரூ. 2.51 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் குழந்தைவேலு (46). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

தொடா்ந்து சிறுமியை மிரட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸாா் குழந்தைவேலுவைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை நிறைவடை்த நிலையில், நீதிபதி ஆா். சத்யா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

குற்றவாளி குழந்தைவேலுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் மற்றும் ரூ. 2.51 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

பெட்டிச் செய்தி...

தொடா்ந்து 3ஆவது நாளாக...

மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தற்போது தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT