புதுக்கோட்டை

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி ஆலோசனைக் கூட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தி அன்று அனைத்துக் கட்சிகள் சாா்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கம் நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் பொன்னமராவதியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அ.அடைக்கலமணி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தை வரும் அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி நாளன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடத்துவது, சுமாா் 3000 பேரைப் பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி.கிரிதரன், நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன், சிபிஎம் ஒன்றியச்செயலா் என்.பக்ரூதீன், இந்திய கம்யூ. மாநிலக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு, விடுதலைச்சிறுத்தைகள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சின்னுபழகு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒனழ்றியசெயலாளா் அழகப்பன், திராவிடா் கழக மாநில இளைஞரணி மாநில துணைச்செயலா் ஆசைத்தம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT