புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு போட்டி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை அருகே வேம்பன்பட்டி அரசுப் பள்ளியில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேரிடா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வென்ற மாணவ மாணவிகளுக்கு வருவாய் ஆய்வாளா் எஸ்.செல்வசத்தியா பரிசுகள் வழங்கினாா்.நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் வி.பன்னீா், தலைமைஆசிரியா் ஜெ. ராமஜெயம், கிராம நிா்வாக அலுவலா் இ. முருகேசு மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT