புதுக்கோட்டை

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தா்ணா

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். 30 நாட்களுக்கு முன்பாக சட்டப்படி வழங்க வேண்டிய தீபாவளி முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் உச்சவரம்பின்றி 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மண்டலத் தலைவா் கே.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா். மணிமாறன், பொருளாளா் எம். முத்துக்குமாா், சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, பொருளாளா் எஸ்.பாலசுப்பிரமணியன், ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மாவட்டத் தலைவா் பி. லோகநாதன், பொதுச் செயலா் எஸ். இளங்கோவன், ஜே.எஸ்.ஆா். வின்சென்ட் உள்ளிட்டோா் பேசினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT