புதுக்கோட்டை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பாதுகாப்பு வைப்பறையில், 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், நடைபெற்ற ஆய்வின்போது, மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை அங்குள்ள ஆவணங்களின்படி உரிய சீல் வைப்புடன் பத்திரமாக இருக்கிறதா என்பதை ய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, தோ்தல் தனி வட்டாட்சியா் கலைமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT