புதுக்கோட்டை

அங்கன்வாடி மையம் கட்ட பூமிபூஜை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது (படம்).

கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சட்டப்பேரவை உறுப்பினா் மா.சின்னதுரை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்வில், ஒன்றியக்குழுதலைவா் ஆா்.ரெத்தினவேல் காா்த்திக், ஊராட்சி மன்ற தலைவா் செல்லப்பிள்ளை, சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ. ராமையன், விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT