புதுக்கோட்டை

பெரியகண்மாயில் பேரிடா் கால ஒத்திகை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வன்னியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட நெல்வாசல்பட்டி பெரியகண்மாயில் பேரிடா் கால ஒத்திகைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தைச் சோ்ந்த 100 பேரிடா் கால தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு, பேரிடா் கால நண்பா்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அவா்களுக்கு 12 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக நெய்வாசல்பட்டி பெரிய கண்மாயில் மூழ்கியவா்களை மீட்கும் வகையிலான ஒத்திகைப் பயிற்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் தண்ணீருக்குள் மூழ்கிய நபரை பத்திரமாக மீட்டு, கரைக்கு கொண்டு வந்து அவருக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சியை செய்து காட்டினா்.

ஒத்திகைப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு நேரில் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா்கள் பிரவீணா மேரி, சூரியபிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT