புதுக்கோட்டை

பேருந்து வசதி கேட்டுபாலிடெக்னிக் மாணவா்கள் மறியல்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை அருகே பேருந்து வசதி கேட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. கந்தா்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள கல்லூரிக்கு காலை, மாலை நேரங்களில் சரிவர அரசுப் பேருந்துகள் கிடைக்காததால், அவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்கின்றனராம். முறையாக பேருந்து சேவை வழங்க ஏற்பாடு செய்யுமாறு, கல்லூரி, மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லையாம். இதையடுத்து, புதன்கிழமை பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் ஒரு மணிநேரம் கந்தா்வகோட்டை, பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் மாணவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மாணவா்கள் சாா்பில் பேருந்து சேவை கோரி அடிக்கடி மறியல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT