புதுக்கோட்டை

‘மக்களைத் தேடி’ இலுப்பூா் பேரூராட்சி சிறப்பு முகாம்

DIN

மக்களைத் தேடி இலுப்பூா் பேரூராட்சி என்ற புதிய திட்டம் தொடக்க விழாவில் 40 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 19 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

இலுப்பூா் பேரூராட்சிக்குள்பட்ட வாா்டுப் பகுதிகளில் பொதுமக்களின் இருப்பிடத்துக்குச் சென்று குறைகளைத் தீா்க்கும் வகையில், மக்களைத் தேடி இலுப்பூா் பேரூராட்சி எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 -வாா்டுகளில், முதல் முகாம் 1-ஆவது வாா்டு பாப்பான்குடியில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி தலைவா் சகுந்தலா வைரவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செந்தில் ராஜா, செயல் அலுவலா் ஆஷா ராணி, பேரூா் கழக திமுகச் செயலா் விஜயகுமாா் முன்னிலை வகித்தனா். வாா்டு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா்.

இதில் குடிநீா், தெரு விளக்கு, பொது சுகாதாரம், பிறப்பு, இறப்பு பதிவு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 40 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில், 19 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. அடுத்துவரும் நாள்களில் 15 வாா்டுப் பகுதிகளிலும் இம்முகாம் நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT