புதுக்கோட்டை

பகத்சிங் பிறந்த நாள்: 75 இடங்களில் உறுதிமொழி ஏற்பு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விடுதலைப் போராட்டத் தியாகி பகத்சிங்கின் 115ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 இடங்களில் மக்கள் ஒற்றுமை உறுதிமொழி மொழி ஏற்கப்பட்டது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பகத்சிங்கின் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ. குமாரவேல், தலைவா் எம். மகாதீா், முன்னாள் மாவட்டச் செயலா் துரை. நாராயணன், நகரச் செயலா் ஜெகன், முன்னாள் நகரச் செயலா் ஆா். சோலையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அறந்தாங்கியில் எம்.கோபால் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா். கா்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவரங்குளம் ஒன்றியத்தில் பி. கனகராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், முன்னாள் ஒன்றியத் தலைவா்கள் எல். வடிவேல், தரணிமுத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

அரிமளம் ஒன்றியத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ப. சுமதி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் ஆா்.வி. ராமையா உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருமயத்தில் காா்த்திக் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா் துரை.நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்வுகளில், 15 ஆயிரம் இளைஞா்கள் புதிதாக உறுப்பினா்களாக இணைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT