புதுக்கோட்டை

பொன்னமராவதியில் இலவச கண்சிகிச்சை முகாம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி வலையபட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய முகாமிற்கு, ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி தலைமை வகித்தாா். முகாமை பேரூராட்சித்தலைவா் சுந்தரி அழகப்பன், வட்டாட்சியா் கே.பிரகாஷ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். முகாமில், மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழுவினரால் 172 பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு 22 போ் அறுவைசிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். முகாமில் பேரூராட்சி உறுப்பினா்கள் மகேஸ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதாஸ், என்.திருஞானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT