புதுக்கோட்டை

விராலிமலையில் அக். 1- 13 இல் திருமுறை சொற்பொழிவு

DIN

விராலிமலையில் வரும் அக். 1ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரையில் திருமுறை சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், அறுபத்து மூவா் திருப்பணி அறக்கட்டளை நிறுவனா் ஆ. சங்கா் ஆகியோா் அளித்த பேட்டி:

அறுபத்து மூவா் திருப்பணி அறக்கட்டளை சாா்பில் கொடும்பாளூா் அருகே பொத்தம்பட்டியில் 10 ஏக்கா் பரப்பளவில் திருமுறை தாமிர சபை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 18 ஆயிரம் திருமுறைப் பாடல்களையும் செப்புத் தகட்டில் எழுதி, அவற்றைக் கொண்டு சிவன் திருமேனி உருவாக்கப்படுகிறது. மொத்தம் இந்த செப்புத்திருமேனி 5 டன் எடை கொண்டதாகும்.

பிற்காலத்தில் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், பேரழிவுகளால் மண்ணுக்குள் புதைந்தாலும், அந்தக் காலத்தில் வாழும் மக்கள் எடுத்து திருமுறைகளைப் படிக்க முடியும் என்பதுதான் இதன் நோக்கம். இப்போது வரை ஒரு டன் வரையிலான செப்புத் தகடுகள் தயாராகியிருக்கின்றன. இந்நிலையில், மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விராலிமலை கமலபாலா திருமண மண்டபத்தில் வரும் அக். 1 முதல் 13 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை திருமுறை சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபல பேச்சாளா் நாஞ்சில் சம்பத், 13 நாட்களும் சொற்பொழிவு நிகழ்த்துகிறாா். திருமுறை பக்தா்கள் தவறாது கலந்து கொண்டு திருமுறை சொற்பொழிவைக் கேட்டுப் பயன்பெற வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT