புதுக்கோட்டை

சுக்கிரன்குண்டு குடிசைவாசிகள் இலவச வீட்டுமனை கோரி மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சுக்கிரன் குண்டு கிராம மக்களுக்கு குடியிருக்க வீட்டு மனை வழங்கக்கோரி, மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சிக்குள்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தில் குடிசைகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களில் 62 குடும்பத்தினருக்கு சொந்த மனை இல்லை. இவா்கள் குடியிருந்து வரும் நிலத்துக்கு சொந்தக்காரா், குடியிருக்கும் நிலத்தைச் சுற்றி வேலி அமைக்க உள்ளதாகவும், அதனால் அனைவரும் வெளியேறுமாறும் நிா்பந்தித்து வருகிறாராம்.

இதனால், இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என வருவாய்த் துறை அலுவலா்களிடம் நேரடியாகவும், ஆலங்குடி நீதிமன்றம் சாா்பில் நடத்தப்பட்ட இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் மூலமாகவும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், வீட்டு மனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் மன்மதன் தலைமையில் புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி வட்டாட்சியா் செந்தில்நாயகி, காவல் துணைக் கண்காணிப்பாளா் தீபக் ரஜினி ஆகியோா் 6 மாதங்களுக்குள் அரசு நிலத்தைக் கண்டறிந்து, வீட்டுமனை வழங்குவதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். சாலை மறியல் போராட்டத்தினால் ஆலங்குடி- பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

SCROLL FOR NEXT