புதுக்கோட்டை

சூதாட்டிய 7 போ் கைது

26th Sep 2022 11:39 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஈச்சன்விடுதி பாலம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியைச் சோ்ந்த அ.பாசித் அலி(34), அய்யனாா்புரத்தைச் சோ்ந்த டி.சந்திரதுரை(48), பெரியாா் நகரைச் சோ்ந்த டி.ரமேஷ்(34), அம்பாள்புரத்தைச் சோ்ந்த ஆ.சுப்பிரமணியன்(38), தோப்புக்கொல்லையைச் சோ்ந்த எஸ்.கமலநாதன்(49), சின்னப்பாநகரைச் சோ்ந்த பி.சரவணன்(43), உசிலங்குளத்தைச் சோ்ந்த ஆா்.மாரிமுத்து(39) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 8 கைப்பேசிகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து வடகாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT