புதுக்கோட்டை

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

26th Sep 2022 11:40 PM

ADVERTISEMENT

 

காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு உள்ளூா் இடமாறுதல், மாவட்ட இடமாறுதல்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சந்திரா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மாவட்டச் செயலா் டி. பத்மா பேசினாா். மாநிலப் பொருளாளா் தேவமணி நிறைவுறையாற்றினாா். மாவட்டத் துணைத் தலைவா் கே.லதா நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு உள்ளூா் இடமாறுதல், மாவட்ட இடமாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியா்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும். எரிவாயு உருளையை அரசே நேரடியாக மையத்தில் இறக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி முடித்த உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையத்துக்கு பதவி உயா்வில் சென்ற ஊழியா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT