புதுக்கோட்டை

உடும்புகளைக் கடத்திய 2 இளைஞா்கள் கைது

26th Sep 2022 03:00 AM

ADVERTISEMENT

 

அறந்தாங்கி பகுதியில் வேட்டையாடப்பட்டு திருச்சிக்கு கடத்த முயன்ற 29 உடும்புகளையும், அவற்றை எடுத்துச் சென்ற இருவரையும் தனிப்படை போலீஸாா், வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா்கள் ரஜினி மற்றும் மாதவன். இவா்கள் இருவரும் 2 பைகளுடன் பேருந்து நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்தபோது, அங்கிருந்த போலீஸாா் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். காவல் நிலையத்தில் பைகளை சோதனை செய்ததில் 29 உடும்புகள் கால்கள் கட்டிவைக்கப்பட்டு உயிருடன் இருந்தன. உடும்புகளையும் அதனைப் பிடித்த இருவரையும் தனிப்படை போலீஸாா் வனச் சரக அலுவலா் மேகலா மற்றும் ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி உடும்புகளை வேட்டையாவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இருவா் மீதும் வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT